நியூ ஸிலாந்தை நேற்று சூறாவளி தாக்கியதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் அவரசநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
நியூ ஸிலாந்தின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கப்ரியல் சூறாவளி தாக்கியது. இதனால், 46,000 இற்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்துதுடன், கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன.
பெரும் எண்ணிக்iகான குடும்பங்கள் இம்பெயர்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான வீடுகள் மின்சாரத்தை இழநை;துள்ளன. நாடு முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன’ என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.
நியூ ஸிலாந்தின் வரலாற்றில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை இது 3 ஆவது தடவையாகும்.
நியூ ஸிலாந்தில் இதற்குமுன் 2019 கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலையடுத்தும், கொவிட்19 பெருந்தொற்று காரணமாகவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
மக்கள் உயிர் தப்புவதற்காக வீடுகளிலிருந்து நீந்திச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறைந்தபட்சம் 509 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதால், எயார் நியூ ஸிலாந்து நிறுவனத்தின் 10,000 இற்கும் அதிகமான சர்வதேச வாடிக்கையாளர்கள் பாதிக்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.