வீட்டுக்கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!

110 0

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பத்தரமுல்லையில் நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப் பயனாளிகளுக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக வீடமைப்பு உதவி வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்குள் கடன் மற்றும் உதவித்திட்டங்களை அடுத்த தவணையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.எனவே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பாதுகாப்புக்காக 300 மில்லியன் ரூபா வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த தொகையின் மாதாந்த மீளப்பெறல் மூலம் பெறப்படும் தொகையில் இருந்து 50 மில்லியன் ரூபா இந்த வைப்பு நிதிக்காக மாதாந்தம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.