முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
பொதுஜன பெரமுனவில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் என்றும் மகிந்த ராஜபக்ஷ பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.