தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து சென்றமை குறித்து ஈஸ்வரபாதம் சரவணபவன் கருத்து

138 0

சி.வி.விக்கினேஸ்வரனுடன் சென்றால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து சென்றதாகவும் ஆனால் சி.வி.விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளார் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (11.02.2023) சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

விக்கினேஸ்வரன் எங்கு சென்றாலும் சேர்வதும் பின்னர் பிரிப்பதுமே அவருடைய பாணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது இந்த சந்தர்ப்பத்தை பாவித்து அவர் கட்சியை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.

இதன் உண்மை தன்மை தொடர்பில் எதுவும் கூற முடியாத நிலையே காணப்படுகிறது. பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.அதற்கு அவர்கள் சம்மதித்திருந்ததாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் நம்பியதாகவும் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.