நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கினியாகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லியத்த பிரதேசத்தில் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய நெல்லியதத் பிரதேசத்தசை சேர்ந்த ஒருவர் எனவும் அவர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வவுனி குளம் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒட்டரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.