அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பி வரும் போது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை சந்தித்து அறிவுரை ஒன்றை வழங்க நினைத்தேன் என பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் சிங்கப்பூரில் இருந்த போது, மஹிந்த ராஜபக்ஸவும் சிங்கப்பூரில்இருக்கின்றார் என கேள்விப்பட்டேன்.
அதனால், நாடு திரும்பும் போது விமானத்தில்அவரை சந்தித்து அவருக்கு அறிவுரை ஒன்று வழங்க நினைத்தேன் எனரணில் கூறியுள்ளார்.
உகண்டா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முறைகளை தழுவுவதை மறக்குமாறுராஜபக்ஸவுக்கு அறிவுரை வழங்க நினைத்திருந்தேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ராஜபக்ஸவுக்கு இந்த அறிவுரையை தன்னால் வழங்க முடியவில்லை, காரணம்நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் நாடு திரும்பவில்லை என ரணில்தெரிவித்துள்ளார்.
புதிய சிந்தனை ஒன்று இல்லாமல் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்போன்று இலங்கை முன்னேற முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக் கொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.