தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறவில்லை! -சேயோன்

202 0

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவு பெற்ற இரா.சாணக்கியனின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் அதிருப்தியடைந்தவராக செயோன் உள்ளார்.

எனினும் நாங்கள் பாரம்பரிய கட்சி ஒன்றில் இருப்பவர்கள் கட்சி என்கின்ற வகையில் பல கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பான விடயம். கட்சியினுடைய மறுசீரமைப்பு தொடர்பாக பல விடயங்களை பேசி இருக்கின்றேன் தொடர்பாக ஒரு கடிதமும் நான் தலைமைக்கு அனுப்பி இருந்தேன்.

கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நான் இளைஞரணி பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன் என்ற செய்தியைத்தான் கூறியிருந்தேன்.

அது திரிவடைந்து நான் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன். அத்தோடு சில நபர்களோடு முரண்பட்டு அதன் காரணமாக வெளியேறுகின்றேன் என்கின்ற போலியான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என செயோன் தெரிவித்துள்ளார்.

நான் எந்த இடத்திலும் தமிழரசு கட்சியை குறிப்பாக தமிழர்களுடைய விடுதலை சார்ந்து, தமிழ் தேசியத்தின் விடுதலை சார்ந்து பயணிக்கின்ற கட்சியில் இருந்து வெளியேறுவேன் என்று சொல்லவில்லை கட்சியினுடைய உறுப்புரிமையில் நான் என்றும் இருப்பேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் நான் முரண்பட்டதாகவும் அதிலிருந்து கட்சியிலிருந்து நான் வெளியேறியதாகவும் போலியான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எனக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் எதுவிதமான முரண்பாடுகளும் இல்லை சுமூகமான ஒரு உறவு இருக்கின்றது எனவும் செயோன் தெரிவித்துள்ளார்.