தழிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் எற்பாட்டில் வடமாகாண கலைஞர்கள் மற்றும் தென் னிந்திய கலைஞர்கள் இணைந்து நடி த்து வெளிவர இருக்கும் கடற்குதிரைகள் திரைப்பட வெளியீட்டின் இசை வெளியீடு நேற்று யாழ். தெல்லிப்பளை ராஜேஸ்வரி மண்டபத்தில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவர் ச.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்னிந்திய குணசித்திர நடிகர் தலைவாசல் விஐய் கலந்துகொண்டார்.
குறித்த இசை இறுவெட்டினை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தலைவாசல் விஐய் வெளியிட்டு வைக்க வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பெற்றுக்கொண்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அண்மைய கால போராட்டங்களை முன்வைத்து குறித்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டதாக தழிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இப் படத்தின் இரண்டாம் பாகமும் எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் இசை ஆர்வலர்கள், ஈழத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.