வவுணதீவு மக்களின் குடிநீர்ப்பிரச்சினை – மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் – ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

274 0

மட்டக்களப்பு-வவுணதீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சனை தொடர்பாக அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு ,ணைத்தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நேற்று மாலை வவுணதீவு பிரதேசத்தில் குடிநீரின்றி அல்லலுறும் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.தூர இடங்களிலிருந்து குடிநீரைப்பெற நடந்து செல்லும் மக்களிடம் அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தபின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் வாழும் மக்கள் குடிநீர் வசதியின்றி மிக நீண்டகாலமாக கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போதைய வரட்சியான காலநிலையியினால் குறித்த பிரதேசத்திலுள்ள கிணறுகளிலும் நீர்வற்றிக் காணப்படுகின்றது.

இந்நிலை இவ்வருட இறுதிவரை தொடரும்.

முழு மாவட்டத்திற்கும் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சைக் குளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக வழங்கப்படுகின் போதிலும் வவுணதீவு மக்களுக்கு குறித்த குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.