இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ், 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார்.
இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இதன், 65-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நேற்றுநடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர் கள் கலந்துகொண்டனர். இந்தியா வைச் சேர்ந்த பெங்களூரு இசைக் கலைஞர் ரிக்கி கேஜுக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது. அவர், ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து உருவாக்கிய ‘டிவைன்டைட்ஸ்’ (Divine Tides) என்ற ஆல்பத்துக்காக இவ்விருது வழங் கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ் வெல்லும் 3-வது கிராமி விருது இது. கடந்த 2015 மற்றும் 2022-ம் ஆண்டுகளிலும் அவர் இந்த விருதை வென்றிருந்தார்.
தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்துள்ள ரிக்கி கேஜ், “3-வதுமுறையாக கிராமி விருதை வென்றதில் மகிழ்ச்சி. இதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னிடம் பேச வார்த்தைகள் இல்லை. இவ்விருதை இந்தியா வுக்கு சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 3 வது முறையாக கிராமி விருது வென்ற அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த் துகள் குவிந்து வருகின்றன.