காலனித்துவ ஆட்சிமுதல் சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழர்கள் -சம்பந்தன்

346 0

download (2)பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கிய தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை குழப்பாது, நிதானமாகவும் செயற்பட வேண்டும் என தமிழ் மக்களிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவரது ஆட்சிக் காலத்தில் சிறந்த தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

எனினும் சந்திரிக்காவிற்கு அப்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையால் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போனதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.