சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
அரசியலமைப்பு பேரவை கடந்த ஜனவரி மாதம் 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கூடியது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் பேரவை ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்திற்கு சிவில் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் பத்திரிகைகள் கடந்த முதலாம் திகதி வெளியாகின.
ஆணைக்குழு உறுப்பினர் விண்ணப்ப படிவம் பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ முகப்பு படிவம், பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பகுதியில் வெளியாகியுள்ளன.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அரசியலமைப்பு பேரவை அறிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு,அரச சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு,நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்களுக்கு தகுதி வாய்ந்த தரப்பினரிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.