தடயவியல் அறிவியல் மாநாட்டில் வட மாகாண ஆளுநர் பங்கேற்பு

148 0

ந்தியா, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திஜி தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) 25ஆவது அகில இந்திய தடயவியல் அறிவியல் மாநாட்டின் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டார்.

குஜராத்தில் உள்ள உலகில் பிரசித்தி பெற்ற தடயவியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் 25ஆவது மாநாடு இடம்பெற்றது.

குறித்த மாநாட்டினை தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் டிரெக்டர் ஜெனரல், பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், புது டில்லி ஜே.எம்.வியாஸ், துணைவேந்தர் எஸ்.கே. ஜெயின், தலைமை தடயவியல் விஞ்ஞானி, தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகம் (DFSS) என பல தரப்பினை சேர்ந்தவர்களும் மேடையில் கலந்துகொண்டனர்.

இதன்போது முதலாவது ‘தடயவியல் ஹேக்கத்தான்-2023’ வெற்றியாளர்களுக்கு ஆறு பிரிவுகளில் 50 இலட்சம் ரூபா பரிசாக பிரதம அதிதியால் வழங்கப்பட்டது.

இலங்கையிலிருந்து காந்திஜி தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாநாடு ஒன்றுக்கு அழைக்கப்பட்ட முதலாவது ஆளுநராக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.