போதைவஸ்து பாவனையில் ஈடுபடும் நபருக்கும், அதனை தடுக்க முயற்சி செய்த நபருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (3) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
போதைப்பொருள் பாவனையாளர் நபரொருவரின் தலைப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது தாக்கப்பட்ட நபரின் தாயாரும் உறவினரான பத்து வயது சிறுவனும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த தாயும் மகனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.