இரா.சம்பந்தனுக்கு இன்று அகவை 90

98 0

லங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் அகவை 90இல் காலடியெடுத்து வைக்கிறார்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த சம்பந்தன் 1977ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வரும் அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதுடையவராகவும், தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார்.

இவர் தனது அரசியல் வாழ்க்கையில் அதியுச்சமாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.

இதேவேளை தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திம்பு பேச்சுவார்த்தை முதல் தற்போது வரையில் சர்வதேச ரீதியான இராஜதந்திர சந்திப்புக்களில் பங்கேற்று வரும் தலைவராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.