சிறிலங்கா சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்- யேர்மன் தலைநகரில் நடைபெற்ற போராட்டம்

371 0

யேர்மனி தலைநகர் பேர்லினில் இன்று இலங்கை சுகந்திர நாளை முன்னிட்டு ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக பல்லின மக்கள் நடமாடும் நகரபகுதில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை பார்வையிட்டு இளையோர்களுடன் உரையாடினர், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

அத்துடன் சிங்கள பேரினவாத அரசால் 75 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை நினைவுகூரும் முகமாக தூபி ஒன்றில் எழுதப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈன்றது.

ஈழத்தமிழர்களுக்கு தமது ஆதரவுக்கரத்தை நீட்டும் முகமாக விடுதலைக்கு போராடும் வேற்றின மக்களும் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு கலந்துகொண்டனர்.

சர்வதேச அரங்கில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் வகையில் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் வலியை எடுத்துரைக்கும் முகமாக இவ் நிகழ்வு மிகவும் காத்திரமான வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.