யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு வரை ஆரம்பமான சுதந்திர தின கரிநாள் போராட்டத்துக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் செயற்பட்ட விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் பேரணி இன்றைய தினம்(04.02.2023) பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதியால் பயணித்தது.
இந்நிலையில் வீதியால் வருகை தந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தனது வாகனத்தின் முன் பக்கத்தில் இருந்த அரச அதிபர் என்ற காட்சிப்படுத்தல் பலகையை நீக்கி போராட்டம் விலகும் வரைக்கும் காத்து நின்றார்.
அவரது செயற்பாடு தொடர்பில் அங்கு நின்றவர்கள் பலரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.