ஒற்றையாட்சியின் 13வது திருத்தத்தினை ஒரு தீர்வாக எற்கவோ தீர்வுடைய ஆரம்ப புள்ளியாக கருதுவதற்கு தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினத்தில் வேடிக்கையான விடயம் சிங்கள தேசத்தில் தங்களுடைய மக்களே ஒரு கரிநாள் அனுஷ்டிக்கின்ற நிலையிலே அவர்களால் நிராகிக்கப்பட்ட தலைவர் ஜனாதிபதி என பதவியினை வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டி போட்டு வெல்ல முடியாத நிலையில் உள்ளார்.
பொருளாதார ரீதியாக நாடு அழிந்து போன நிலையில் அந்த பதவியை வைத்து தனக்கொரு கொண்டாட்டத்தினை நடாத்துவதற்காக இன்றைக்கு பல நிகழ்வினை செய்து கொண்டு இருக்கின்றார்.
இந்த சுதந்திர தினத்தினை நடாத்தாமல் விட்டால் உலகம் பார்த்து சிரிக்கும்.
இன்றைக்கு பார்த்து சிரிக்க போவது தேசத்துடைய சிங்கள மக்களுடைய தலைவர் கொண்டக் கூடிய நிலையினை, நிலத்தில் பார்த்து துப்பிக்கொண்டு இருக்கின்ற நிலையை பார்த்து தான் உலகம் சிரிக்கும் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ளுவார்.
உண்மையான உரிமை, விடுதலையை செயற்படுவதற்கு உறுதியான கோணத்திலே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
சிங்கள தரப்புக்கள் கூறுவது போல தமிழர்களின் அபிலாசைகளுக்கு தமிழ்தேசம் எந்தொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சி 13வது திருத்தத்தினை ஒரு தீர்வாக எற்கவோ, தீர்வுடைய ஆரம்ப புள்ளியாக கருதுவதற்கு தயாராக இல்லை.
இது இன்றைய கிழர்ச்சியின் வாயிலாக எடுத்து கூறப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.