சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய வங்கி ஆளுநரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் முழுமையான ஆதரவை வழங்குவதாக அமெரிக்க உறுதியளித்தது என தெரிவித்துள்ள அமைச்சர் அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ள படி பாரிஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை அனைத்து கடன் வழங்குநர்களையும் சமமமாக நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.