புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது

121 0

மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஏதேனுமொரு வகையில் திறைசேரியிடமிருந்து கோரப்பட்டுள்ள நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.