வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

129 0

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  வசந்தமுதலிகேயின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என பொலிஸ்தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேயை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையிலேயே  பொலிஸ் தலைமையகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இது தொடர்பிலான வேண்டுகோளை பொலிஸ்தலைமையகம் சட்டமா அதிபர்திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

வசந்த முதலிகேக்கு எதிராக பயங்கரவாத விசாரணை பிரிவினரின் விசாரணை தொடர்வதன் காரணமாகவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.