பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் நாளை

116 0

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவிருக்கும் நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.