பரீட்சை மேற்பார்வையாளருக்கு எதிராக மாணவி முறைப்பாடு!

120 0

மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக மாத்தளை காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, அங்கு பரீட்சை மேற்பார்வை கடமையிலிருந்த இருந்த ஆசிரியர் ஒருவரிடம் மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 27ஆம் திகதி மாணவி இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வை செயற்பட்ட விதத்தின் காரணமாக  தான் பாடத்தை மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.