மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இல்லாமல் 13ஆம் திருத்தத்தை பூரணமாக செயற்படுத்த வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் வடக்கு கிழக்கு பூமி மற்றும் வளங்கள் இந்தியாவின் நேரடி ஆக்கிரமிக்கு ஆளாகுவதுடன் நாட்டு மக்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாமல் போகும் என எல்லே குணவன்ச தேரர் உட்பட சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்து பகிரங்க மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை பூரணமாக செயற்படுத்தும்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உட்பட மேலும் பல அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்க நேரிடுகிறது. அது இலங்கையின் அரச பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு. பொருளாதார இறையான்மை மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
அத்துடன் திருத்தங்கள் பூரணமாக செயற்படுத்தும் போது ஒவ்வொரு மாகாணத்துக்குள்ளும் ஒன்றுக்கு ஒன்று வேறாக செயற்படும் மற்றும் முதலமைச்சருக்கு பொறுப்புக்கூறக்கூைடிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கீழ் நிர்வகிக்கப்படும் பொலிஸ் இராணுவம் ஏற்படுத்தப்படும்.
இதன் ஊடாக மாகாணங்களுக்கிடையில் பொலிஸ் ஆணைக்குழு நியமிப்பதும் மத்திய அரசாங்கம் பொலிஸிக்கு பிரதேச மட்டத்தில் அதிகாரங்களை செயற்படுத்தும்போது கடுமையான வரையறைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. இது அரச பாதுகாப்பு மற்றும் நாட்டுக்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு மோசமான அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
அத்துடன் 13ஆம் திருத்தம் மூலம் காணி அதிகாரம் பரவலாக்கப்படுவதன் மூலம் மாகாணசபை விசாரணை இல்லாமல் மாகாணம் ஒன்றுக்குள் இருக்கும் அரச காணி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதிக்கு வரையறை விதிப்பது, தொல்பொருளுடைய முக்கியமான இடங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பிரதான அரசாங்கத்தில் இருந்து மாகாணசபை சுயாதீனமாக நடவடிக்கை எடுக்க முடியுமான நிலை ஏற்படுகிறது.
வடமாகாணசபையின் ஆட்சி அதிகாரம் இருக்கும் போது, அங்கு வாழும் மக்களுக்கு எந்த சேவையும் மேற்கொள்ளாமல் டீ.என்.ஏ, உறுப்பினர்கள், எந்த குறையும் இல்லாமல் இந்தியாவின் சுரண்டும் கொந்தரத்தை செயற்படுத்துவதற்காக மாகாணசபைக்கு பூரண அதிகாரம் கிடைக்கும்வரை எதிர்பார்த்திருக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி இந்திய வெளிவவிகார அமைச்சருடன் கலந்துரையாடி இருப்பது, இவ்வாறு வளங்கள் மற்றும் பூமியை ஆக்கிரமிக்கும் இந்திய சதித்திட்டத்தின் இந்தியாவின் தயாரிப்பான மாகாணசபை பொறிமுறை ஊடாக செயற்படுத்தவாகும்.
எனவே அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இல்லாமல் பூரணமாக செயற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி, பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களை கேடடுக்கொள்கிறோம்.