அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு துரிதமாக இருக்கும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.