வாகனத்தின் டயர்களை கூரிய ஆயுதங்களால் குத்திய நபர் கைது

117 0

மஹரகம  நகர சபை தவிசாளரான டிராஜ் லக்ருவன் பியரத்னவின் உத்தியோகபூர்வ கெப் வாகனத்தின் டயர்களை  கூரிய ஆயுதங்களால் குத்தி பாரிய சேதத்தை ஏற்படுத்தியவரை  மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம நகர சபையில் கடமைாற்றும் பணி ஆய்வாளர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மஹரகம நகர சபையின் பிரதான காரியாலயத்தில் நிறுத்திவிட்டு சென்றிருந்தபோது இந்த பொருட்சேதம் இடம்பெற்றுள்ளதாகம்,டயர்களை கூரிய ஆயுதங்களால் குத்தியதில், 4 டயர்களிலிருந்தும் காற்று வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் ‍ தெரிவிக்கின்றனர்.

தவிசாளருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபரான பணி ஆய்வாளரை நு‍கேகொடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.