உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த தகவலின் பிரகாரம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியை யார் மறைத்தார்கள் என்பதுதான் எமக்கு பெரும் பிரச்சினை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மேலும் கருத்துத் தெரிவித்தார்.