வெளிநாடுகளுக்கு செல்வோர், பெற்றோருக்கும் வெளியுலகை காட்ட வேண்டும் என சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இணையத்தில் சுவாரஸ்ய கதைகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. சிங்கப்பூரில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் தத்தாத்ரே என்ற இளைஞர் தனது தாயுடன் சிங்கப்பூரில் இருக்கும் படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
எனது தாய் தனது வாழ்க்கை முழுவதும் அவர் சொந்த கிராமத்திலேயே கழித்தார். விமானத்தை அவர் அருகில் இருந்து பார்த்தது கூட இல்லை. எனது தாயை, நான் பணியாற்றும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்துள்ளேன். அவரது தலைமுறையில் வெளிநாட்டு செல்லும் முதல் நபர் அவர். எனது தந்தை அழைத்து வர முடியாமல் போனதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. வெளிநாடு செல்வோர், உங்கள் பெற்றோர்களுக்கும் அழகான வெளியுலகை காட்டுங்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.