அறுவடை நெல்லை நியாய விலைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை

213 0

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நியாய விலைக்கு நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். உற்பத்தி செலவுக்கு ஏற்ப நெல்லுக்கு நியாய விலை கிடைக்காத நிலையில், தாம் பாரிய நட்டத்தை எதர்கொள்வதாக தெரிவிக்கும் விவசாயிகள், நெல்லுக்கு நியாய விலை கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.