பிரான்சில் இடம்பெற்ற மாசிமாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் வீரத்தாய் பார்வதியம்மா நினைவேந்தல்!

313 0

மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.02.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.

இன்றைய தினம் சாவடைந்த தமிழீழத் தேசியப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் நிகழ்வில் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் 2001 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். ஆதவனின் சகோதரன் திருஉருவப்படங்களுக்கான சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நினைவுரையை தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இன்றைய செயற்பாடுகள் தொடர்பாகவும் மறைந்த தேசியப்பாடகரின் மறைவு குறித்தும் தனது கருத்தினைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.