ஈழத்தின் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(காணொளி)

317 0

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்     இன்று உயிரிழந்தார்
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் அவர்களின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி தொடக்கம் இரவு 11மணி வரை யாழ்ப்பாணம் இன்பம் மண்டபத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது .

பின்னர் அன்னாரின் புகழ் உடல் மாங்குளம் எடுத்துச்செல்லப்பட்டு  நாளை திங்கட்கிழமை நண்பகல் வரை வைக்கப்பட்டு  பின்னர் மாங்குளம் மகாவித்தியாலய  மைதானத்தில் அன்சளி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரின் புகழ் உடல்  கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில்  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் செவ்வாய் கிழமை மாலை 2 மணிக்கு இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது