அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைது

305 0

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வவுனியாவில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் நாடுபூராகவும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரிஷாட் பதியூதின் இதன்பாது மேலும் தெரிவித்துள்ளார்