தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

393 0

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர். நடைபெற்ற இனவழிப்புக்கும் , இன்றும் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் பரிகார நீதியை வேண்டி எதிர்வரும் 6 .03 .2017 அன்று ஜெனிவா மாநகரில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து ஐரோப்பா வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது தேசியக் கடமையை செய்யவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி