மஹிந்த மீது சம்பந்தன் குற்றச்சாட்டு

403 0

Mavai-and-Mahindaமஹிந்த தரப்பினர் மேற்கொள்ளவுள்ள பாதையாத்திரையானது புதிய அரசியல் யாப்பு சாசனத்தை குழப்பும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன் இந்த குற்றச்சாடை சுமத்தியுள்ளார்.
மன்னாருக்கு  நேற்று விஜயம் மேற்கொண்ட அவர் மன்னார் மறைமாவட்ட ஆயர், வணக்கத்துக்குரிய கிங்ஸ்லி சுவாம் பிள்ளை மற்றும் முன்னாள் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்கு உரிய ஜோசப் ராயப்பு ஆண்டகை ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவர் இதனை குறிப்பிட்டார்.