பொன்சேகாவிற்கு ஐ.தே.கவின் துணைத் தலைவர் பதவி?

246 0

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவராக நியமிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளை வைத்துக் கொண்டே நியமனம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மக்களின் கதாநாயகனாக கருதப்பட்டார்.

எனவே பொன்சேகாவினால் கட்சியின் விளம்பரத்திற்கு சிறந்த பங்களிப்புகளை செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் நிலையை உடனடியாக,கட்சித் தலைவர் மாற்றவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கட்சியின் துணைத் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாசவும் அவருக்கு பின்னர், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும்அங்கம் வகித்து வருகின்றனர்.