மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

306 0

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்

வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் தொடர்கின்றது இவர்களின் அறவழிப் போராட்டம்

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டமானது வெற்றிபெற வேண்டும் மக்களுடைய காணி மக்களிடம் ஒப்படைக்கவேண்டுமென அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவாக  அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் இடத்தில் கூடிய மாணவர்கள்  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்

இந்த மாணவர்கள்  தங்கக்கோவிலா கேட்டோம் சொந்த பூமியை தானே கேட்டோம். இந்த  மண்  எங்களின் சொந்த மண்.  எம் காணி எம் உரிமை. எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும். எங்களை எண்கள் காணிகளில் சுதந்திரமாக வாழவிடுங்கள். எமது கோரிக்கைக்கு செவிசாய்க்குமா நல்லாட்சி  அரசு. சொர்க்கமே என்றாலும் சொந்த பூமிபோல் சுதந்திரம் வருமா.  போன்ற     பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறு  போராட்டத்திலீடுபட்டனர்.