காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

307 0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன் முஸ்ஸிம் மற்றும் சிங்கள மக்கள் இப்போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கிறது.