அரிசி மோசடியில் ஈடுபட்ட 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

266 0

கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமற்ற அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1300 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் சேவை அதிகார சபை பெப்ருவரி மாதத்துக்குள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1900 பேரை அடையாளம் காண்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசியை உள்நாட்டு அரிசியுடன் கலந்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.