அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய மகா சபை முதற்தடவையாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவுள்ள இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதில், சமயங்களின் தலைவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய செயற்திட்டமொன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.