வவுனியா – மெதவச்சயகுளம் பிரதேசத்தில் புகையிரதத்திற்கு கல் எறிந்துள்ள 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.05 மணிக்கு யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்திற்கு சந்தேக நபர்கள் கல் எறிந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
20 வயதுடைய வவுனியா பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.