யாழ்ப்பாணம் சீனியர் ஒழுங்கையில் இரு இளைஞர்கள் அவ் வீதியால் வந்து திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பிய போது வீதியில் வழுக்கி விழுந்துள்ளனர். அந்த இடத்தில் நிகழ்வொன்றிற்கு பாதுகாப்பு கடமையில் நின்ற பொலீசார் அவர்களை விசாரித்து பரிசோதித்த போது அவர்களின் பொக்கற்றுக்குள் இருந்து மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
எனினும் போதைப்பொருளுடன் கைது செய்யும் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதே பொலீசாரின் கடமை ஆயினும் யாழ்ப்பாண பொலீசார் அக்கடமையை செய்யாது மாவாவுடன் கைது செய்தவர்களின் பெயர்களை மட்டும் தமது பதிவு கொப்பியில் பதிந்து விட்டு நீங்க போங்க என வழியனுப்பினர்.சில வேளைகளில் கடமையில் இருந்த பொலீசார் கையூட்டு பெற்று போதைப்பொருளுடன் பிடிபட்டவர்களை பொலீசார் விடுதலை செய்தார்களா என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.