மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தேசிய தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் ஆயிரத்து 855 பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 155 பேர் 15 வயதுக்கு குறைந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 40 வீதமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன், இரண்டாவதாக தென் மாகாணத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.