யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும், 2 சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று வெள்ளிக்கிழமை (20) மதியம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, சட்டத்தரணி ந.காண்டீபன், தீபன் திலீசன் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.