தற்போது அரசாங்கத்தின் பண முகாமைத்துவம் மிகவும் பாரதூரமான நிலையில் இருப்பதாக திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு திறைசேரியின் செயலாளரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் செலவுகள் மேலும் அரசாங்கத்தின் நிதி நிலைமையில் மிகவும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தேர்தலுக்கான ஆதாரங்களை திறைசேரி பெறுவது மிகவும் சவாலான விடயமாக இருக்கும் எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.