சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது.

286 0

லிந்துலை காவல்துறை பிரிக்குட்பட்ட பம்பரகால தோட்டத்தை சேர்ந்த 12வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை லிந்துலை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

சம்பத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.