முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட இருவரை ஐயன்கன்குளம் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (16) அன்று கைது செய்துள்ளார்கள்.
விசுவமடு கிழக்கினை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரும் தர்மபுரம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரும் இணைந்து 6 கிலோ கஞ்சாவினை கடத்த முற்பட்ட வேளை ஐயன்கன்குளம் பொலிஸாரின் விசேட நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.