பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

322 0

 

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணி வரையில் சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் மல்லாகம் சந்தியில் பழம் பிள்ளையார் ஆலயம் முன்பாக நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் “இங்கு நடப்பது நல்லாட்சியா? நரி ஆட்சியா”, “எமது பிள்ளைகள் பாடசாலை செல்லமுடியாத நிலையை உருவாக்குவது நல்லாட்சியா?”, “எமது வளங்களை திருடாதே”, ” எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கிவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.