இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட குழு வைச் சேர்ந்த ஒருவரை கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
‘குட் லக்கி’ ராஜேந்திரன் என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் குழுவின் தலைவராக செயல்பட்ட இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக’பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் சு. திருநாவுக்கரசினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை கட்சியில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றூர்ந்து ஒன்றின் மூலம் 11.9 கிலோகிராம் நிறையுடைய இந்திய ரூபா 3 கோடியே 58 லட்சம் பெறுமதியான தங்க பாளங்களை, சிற்றூர்ந்து ஒன்றின் மூலம் கடத்;த முற்பட்ட வேளை இந்திய வருவாய் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.