ஹொ ங்கோங் விடயம் – மறுக்கும் இலங்கை காவல்துறை தலைமையகம்

375 0

ஹொங்கோங்கில் வசிக்கும் இலங்கைகள் குறித்து தகவல் பெறும் நோக்கில், இலங்கை காவல்துறையினர் மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் ஆகியன மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகம் இந்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹொங்கோங்கில் வசிக்கும் இலங்கைகள் குறித்து தகவல் பெறும் நோக்கில், இலங்கை காவல்துறையினர் மற்றும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், கருந்தரங்கு ஒன்றின் பொருட்டே அவர்கள் அங்கு சென்றதாகவும் எந்த விதமான விசாரணைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை எனவும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.