சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் நாயகம் இலங்கை செல்லவுள்ளார்.

342 0

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் நாயகம் கிரிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, இவர் அடுத்த மாதம் இலங்கை செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இவரின் விஜயம் குறித்து இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் செயலக அதிகாரிகள் உரிய பயண ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை மேலதிகமாக 150 கோடி அமெரிக்க டொலர் நிதியினை கடந்த வருடம் கோரியிருந்தது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு வைப்பு 740 கோடி அமெரிக்க டொலராக தற்போது வைப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.